20ஆவது தேசியக் கட்சி காங்கிரஸ் கூட்டத்தொடருக்கு முன்னதாக ஷங்காயில் முடக்கல் பகுதிகள் இயல்புநிலைக்கு திரும்பியதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.
முன்னதாக, கொரோனா நெருக்கடிகள் அதிகரித்திருந்த நிலையில், ஷங்காயில் தனிநபர் நடமாட முடியாத அளவுக்கு முடக்கல் நிலைமைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
எனினும், காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒருவாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பொழுது புதிய இயல்புநிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விடுமுறைக்காலத்தில் 1,878 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இது ஓகஸ்ட் 20 க்குப் பின்னர் பதிவான உச்ச தொற்றாளர்கள் எண்ணிக்கையாகும் மிக அதிகம் என புலனாய்வு பத்திரிகை அறிக்கை கூறுகிறது.
சீனாவின் நிதி மையமாக, அடையாளம் காணப்பட்ட ஷங்காயில் கொரோனா தொற்றுக்கள் இனங்காணப்பட்ட நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கடுமையான முடக்கல் விதிமுறைகள் அமுலாக்கப்பட்டன. இது அங்குள்ள மக்களை துயரத்திற்குள் உள்ளாக்கியது.
அதேநேரம், புதிய தொற்றுக்கள் உள்ளுரில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் ஒற்றை நபர்கள் கூட கடுமையான விதிமுறைகளின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
குறிப்பாக, சிறுசிறு மண்டலங்களாக வரையறுக்கப்பட்டு மனிதாபிமானம் அற்ற நிலையில் கூட அவர்கள் நடத்தப்பட்டனர்.
இதேவேளை, அண்மைய வாரங்களில், சீனாவில் தினசரி சராசரி தொற்றுக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தரவுகளின் படி கிட்டத்தட்ட 2,000 பேர் நாளொன்றுக்கு தொற்றுக்கு உள்ளாகின்றனர்.
சீனா முழுவதும் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் சேவைத் துறை நடவடிக்கைகளில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, இது வணிக நடவடிக்கைகளை சீர்குலைத்துள்ளதோடு வேலை வாய்ப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது.