இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 திகதி இராஜாங்க அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டு கல்லடி பாலத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்கார் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தி வெளியேற்றிய நிலையில் குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் எடுக்கப்பட்டது.
இதில் எதிராளியான மாநகர சபை உறுப்பினர்களான செல்வி மனோகரன் உயிரிழந்துள்ளதுடன் வழக்கு விசாரணைக்கு பொலிஸார் தொடர்ந்து சமூகமளிக்கவில்லை.
இதனால் அமைச்சர் உள்ளிட்ட 4 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதவான் அறிவித்தார்.