புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை தாமதமடையக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ரயில் திடீரென கந்தானை கப்புவத்த நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.40 மணியளவில் ரயில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக புத்தளம் மார்க்கத்திலான கொழும்புக்கும் ஹலவகடவுக்கும் இடையில் இயங்கும் ரயில் தாமதமடையக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் ரயில் தடம் புரண்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று மற்றும் நேற்று முன்தினம் கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான ரயில் பாதையில் மூன்று ரயில்கள் தடம் புரண்டன என்பது குறிப்பிடத்தக்கது.