எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்காமல் நியாயமான விலையில் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர், பண்டிகை காலம் நெருங்கி வருவதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார்.
மக்களின் நலன் கருதி முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை பேணப்பட்டு வருவதாகவும், கோதுமை மாவின் விலையை அடுத்த சில மாதங்களில் தொடர்ந்தும் பேண வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார்.