கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை என உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.
உக்ரைனுகு நவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள், விமானங்கள், டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை என்பன வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெப்ரவரி மாதம் பிற்பகுதியில் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளிடம் இருந்து மேலதிக ஆயுதங்களுக்கு கிய்வ் பலமுறை அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் உக்ரைன் ஜனாதிபதியின் முக்கிய நிபந்தனை உக்ரேனிய பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதாகும் என்றும் உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.
உக்ரைனின் எல்லைகளை மீட்டெடுக்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தாயார் என உக்ரேனிய ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.