2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
முன்னதாக இன்று 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டம் கூடியது.
இதன் போது, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்ற ஆரம்பித்துள்ளார்.