இத்தருணத்தில் தேர்தலை நடத்துதினால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு எதிர்நோக்கும் சவால்களின் பாரதூரத்தை சில தரப்பினர் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால் ஸ்திரமான நாடாளுமன்றத்தை எவராலும் உறுதிப்படுத்த முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சம்பவத்தையும் அரசியலாக்காமல், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பாரிய சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி முன்வைத்துள்ள வேலைத்திட்டத்திற்கு பொதுமக்கள் அடுத்த தேர்தலில் பதிலளிப்பார்கள் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.