சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஷி ஜின்பிங்கின் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாகியுள்ளார்.
இந்நிலையில், பொருளாதாரம், வெளிநாட்டு உறவுகள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் பீஜிங் இன்னும் இறுக்கமான கொள்கைகளை பின்பற்றும் என ஆய்வாளர்கள் வொஷிங்டனை தளமாகக் கொண்ட ரேடியோ ஃப்ரீ ஏசியாவுக்கு தெரிவித்தனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைக்குழுவில் முக்கிய உதவியாளர்கள் பதவி உயர்வு பெற்றனர்.
ஆனால், பல ஆண்டுகளாகவே எந்தப்பெண்ணும் உயர்குழுவிற்குள் உள்வாங்கப்படும் சம்பிரதாயங்கள் இடம்பெறாமை இம்முறையும் தொடர்ந்தது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜேர்மனியை தளமாகக் கொண்ட மொங்கோலிய இன உரிமை ஆர்வலர் ஷி ஹய்மிங்கின் கருத்துப்படி, ஷி தனது நெருங்கிய கூட்டாளிகளை அரசியல் நிலைக்குழுவில் நிரம்பியிருந்தார். இதுவே அவரை சர்வாதிகாரியாக வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
‘சீனாவில் உள்ள மக்கள் ஷியின் மந்திரவாதிகளாக இருப்பதற்கே வரிசையாக நிற்கிறார்கள், அவரை வணங்குகிறார்கள், பேரரசர் அரியணை ஏறியுள்ளார் என்று கருதுகின்றார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
பழிவாங்கும் பயம் காரணமாக தன்னை அடையாளம் காட்டுவதற்கு மறுத்த சீன ஊடகவியலாளர் ஒருவர், ‘சீனா இப்போது மாவோ சகாப்தத்திற்கு உறுதியாக திரும்பியுள்ளது.
20ஆவது தேசிய காங்கிரஸின் நிறைவு மாவோ சகாப்தத்தின் ஆரம்பம். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 9ஆவது தேசிய காங்கிரஸ் மோசமானது என்று மக்கள் கூறினர். ஏனெனில் அது மா சேதுங்கை சிவப்பு சூரியன் என்று பாராட்டி அதிகாரங்களை வழங்கியது’ என்றார்.
அதேநேரம், ஆய்வாளர் வென் ஜிகாங்கின் கூற்றுப்படி, கூட்டுத் தலைமை என்ற பழைய அமைப்பு உண்மையாகவும் இறந்துவிட்டது. கூட்டுத் தலைமை இனி இல்லை என்று கூறினார்.
மூத்த சீன ஆராய்ச்சியாளர் வு குவோகுவாங்கின் கூற்றுப்படி, மறைந்த உச்ச தலைவர் மாவோ சேதுங் செய்ததை விட, மோசமான விடயங்கள் நிகழ்கின்றன.
யார் பிரதமராக வேண்டும் என்பது பற்றி ஷியே தீர்மானிக்கின்றார். ஆகவே மாவோ சேதுங் செய்ததை விட ஷியே அதிக அதிகாரம் கொண்டவர்’ என்றார்.