மன்செஸ்டரில் உள்ள சீன துணைத் தூதரக ஊழியர்களால் ஜனநாயகத்திற்கு ஆதரவான ஹொகொகாங் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைக் கையாண்ட முறைமையானது சீனா – இங்கிலாந்து உறவுகளை மேலும் சீர்குலைத்துள்ளது.
அத்துடன் அந்த முறைமையானது. ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கீழ் இராஜதந்திரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘ஓநாய் போர்வீரர்’ இராஜதந்திரத்தை பிரதிபலிக்கிறது என தி டிப்ளோமட் தெரிவித்துள்ளது.
சீனாவின் தூதரான ஜெனரல் ஜெங் சியுவான், ஜனநாயக சார்பு எதிர்ப்பாளரை தூதரக வளாகத்திற்கு தலைமுடியில் பிடித்து இழுப்பதைக் காட்டும் புகைப்படங்களுக்கு வெளியாகியிருந்தன.
அது தொடர்பில் கருத்துவெளியிட்ட ஜெங் என் “நாட்டை, என் தலைவரை துஷ்பிரயோகம் செய்தார். ஆகவே அவ்வாறு செய்வது என் கடமை’ என்று குறிப்பிட்டார்.
அவரது கருத்துக்கள் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு மிகை தேசியவாதமாக தோன்றலாம், ஆனால் சீனாவின் உள்நாட்டு தேசபக்திக்கு ஜெங் கருவியாகவே இருக்கின்றார்.
மன்செஸ்டர் நிகழ்ந்த இச்சம்பவத்தினை போன்று ஒக்டோபர் 2020 இல், பிஜியில் உள்ள தாய்வாள் தூதரக அதிகாரி ஒருவர் இரண்டு சீன தூதர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினை அடுத்து தலையில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தாய்வான் தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்படாமல் வருகை தந்திருந்த சீன தூதர்கள் பிரசன்னமாகியிருந்த விருந்தினர்களை புகைப்படம் எடுக்கத் தொடங்கியதை அடுத்து சண்டை மூண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வன்முறையின் கூற்றுக்களை மறுத்தார்.
ஜாவோ லிஜியன் இந்த இராஜதந்திர பாணியை ஆரம்பகாலமாக ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் ஷியின் இராஜதந்திர மையத்திற்குள் தொடர்ந்து பதவி உயர்வுகளைப் பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சமூகத்தின் உலகளாவிய விமர்சனங்கள் மற்றும் கண்டனங்களுக்கு முகங்கொடுத்தாலும் கூட, சீனாவின் ‘துணிச்சலான பாதுகாவலர்கள்’ தங்கள் ‘ஓநாய் போர்வீரர்’ இராஜதந்திரத்தை தொடருகின்றனர்.
அமெரிக்க வாராந்திர செய்தி இதழான நியூஸ் வீக்கிற்கு எழுதிய ஜியான்லி யாங், ‘எதிர்ப்புத் தொனியைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படையாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்’ என்று ஷி ஜின்பிங்கின் அறிவிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அத்துடன், பீஜிங்கின் ‘ஓநாய் போர்வீரர் இராஜதந்திரம்’ முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளது என்பதை சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஒரு அனுபவம் வாய்ந்த புரட்சியாளர் சோ என்லாய் ‘இன்றைய ஓநாய் போர்வீரர்களின் முன்னோடி’ என்றும் குறித்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, மக்கள் விடுதலை இராணுவத்திற்கான இராஜதந்திரத்தின் புதிய மந்திரமும் உருவாக்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஓநாய் போர்வீரர்’ இராஜதந்திரம் என்பது மோதலுக்குரியது மற்றும் போரிடக்கூடியது என்று குறிப்பிடலாம், அதனடிப்படையில் தான் சீன இராஜதந்திரிகள், தமது நாடு, அரசாங்கம் மற்றும் கொள்கைகள் மீதான எந்தவொரு உணரப்பட்ட விமர்சனத்தையும் உரத்த குரலில் கண்டனம் செய்கிறார்கள்.