மத்திய சீனாவின் வுஹான் முதல் வடமேற்கில் ஜினிங் வரையிலான சீன நகரங்கள் கொரோனா விதிகளை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன.
சீனாவில் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் மூன்றாவது நாளாகவும் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2019இன் பிற்பகுதியில் உலகின் முதல் கொரோனா வெடித்த தளமான வுஹானில் இந்த வாரத்தில் நாளொன்றுக்கு சுமார் 20 முதல் 25 புதிய தொற்றாளர்களை பதிவுசெய்தது. நகரில் கடந்த 14 நாட்களில் 240 தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, உள்ளுர் அதிகாரிகள் ஒரு மாவட்டத்தில் 800,000 இற்கும் மேற்பட்ட மக்களை ஒக்டோபர் 30 வரை வீட்டிலேயே இருக்க உத்தரவிட்டிருந்தனர்.
கொரோனா தொற்றாளர் ஒருவர் பன்றி இறைச்சி விநியோகச் சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டதை அடுத்தே அதிகாரிகள் அவ்வாறான முற்றுகையை அறிவித்திதனர்.
பொருளாதார உற்பத்தியில் சீனாவின் நான்காவது பெரிய நகரமான குவாங்சேர், அதிகமான தெருக்களையும் சுற்றுப்புறங்களையும் முடக்கலில் வைத்து மக்களை தங்கள் வீடுகளுக்குள் இருக்கமாறு கோரியுள்ளனது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவலானது உலகளாவிய தரவுகளுடன் ஒப்பிடுகையில், சிறியதாகவே உள்ளது.
ஆனால் மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிரான அதன் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சீனாவினதும், சர்வதேசத்தினதும் பொருளாதாரத்தை பாதிப்பதாக உள்ளது.
கொரோனா பரவலுக்கு எதிராக பூஜ்ஜிய கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், வைரஸைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.