இந்தியாவின் ஆயுஷ் துறையானது 2023ஆம் ஆண்டுக்குள் தனது சந்தைப் பங்கை உலகளவில் 23 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் என மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.
பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய சோனோவால், ‘ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான எமது வளமான பாரம்பரியத்தில் இருந்து உருவான மிகச்சிறந்த நடைமுறைகளில் ஒன்று ஆயுர்வேதம்.
பிரதமர் நரேந்திர மோடியின் ‘உள்ளுர் மக்களுக்கான குரல்’ அழைப்பு, வளமான அனுபவத்துடன் இந்திய பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஊக்கமளித்தது.
ஆயுர்வேதத்தின் பரவலான ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை, மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகளுடன், உலகளவில் ஆயுஷ் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
மேலும் 2023 ஆம் ஆண்டுக்குள் இந்திய ஆயுஷ் துறை 23 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குறையாத சந்தைப்பங்கைப்பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஆயுர்வேதத்தின் கல்வி, ஆராய்ச்சி, அறிவியல் ஆய்வு மற்றும் பகுத்தறிவு அறிவியல் மதிப்பீட்டு செயல்முறையின்படி முன்னெடுக்கப்பட வேண்டும்.
நிபுணர்கள், வைத்தியர்கள், மருந்துத் தயாரிப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய அனைவரையும் இத்துறை சிறந்து விளங்க பாடுபடவேண்டும்.
இதற்கிடையில், ஆயுஷ் அமைச்சானது புதுடில்லியின் பிரகதி, மைதானத்தில் உள்ள 41ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியினை முன்னெடுத்து வருகின்றது.
இந்திய ஆயுஷ் அமைச்சு ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி துறையில் இந்தியாவின் சுறுசுறுப்பான தொழில்முனைவோரை ஊக்குவித்து வருகிறது.
பல்வேறு பிரிவுகளில் 14 இற்கும் மேற்பட்ட ஆரம்பங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையானது. ஆயுஷின் வளர்ந்து வரும் வலிமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.