பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மறுவதற்கான பாதையில் முன்னேறி வருகிறது, என இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்து, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், “கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர் வளர்ச்சி, கண்ட நாடு இந்தியாவாகும்.
தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சில ஆண்டுகளில் இந்தியா முன்னிலைக்கு செல்லவுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
கடந்த எட்டு ஆண்டுகளில் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக, உலகம் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது, மறுபுறம், ரஷ்ய, உக்ரேனிய போரினால் தாக்கங்களும் உள்ளன, அவற்றின் விளைவுகளை உலகம் பார்த்துக்கொண்டுள்ளது.
ஆனால் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும், இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் அந்த திசையில் மிக வேகமாக முன்னேறி வருவதாகவும் உலக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளில், நிர்வாகத்திலும், சிந்தனை முறையிலும், அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது, அது உள்கட்டமைப்பு, அரசாங்க செயல்முறைகள், எளிதாக வர்த்தகம் செய்தல் உள்ளிட்ட அனைத்து மாற்றங்களும் இந்தியாவின் ‘அபிலாஷையுள்ள சமூகத்தை ஊக்குவிக்கின்றன.“ எனத் தெரிவித்தார்.