வரலாற்றில் முதன்முறையாக தெற்காசிய குமித்தே கராத்தே போட்டியில் மட்டக்களப்பு வீரர் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தெற்காசிய கராத்தே போட்டியில் இலங்கை சார்பில் பங்குகொண்ட மட்டக்களப்பினை சேர்ந்த இளைஞர் துஷியந்தன் வெள்ளிப்பதக்கம் பெற்று இலங்கைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமைசேர்த்துள்ளார்.
ஆறாவது தெற்காசிய குமித்தே கராத்தே சுற்றுப்போட்டி இலங்கையில் நடைபெற்றது.
இதில் இந்தியா, பூட்டான், பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாள்,இலங்கை ஆகிய ஆறு நாடுகள் பங்குகொண்டன.
இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு ஜேகோமோ கழகத்தின் சார்பில் பங்குகொண்ட துஸ்யந்தன் அவர்கள் 55கிலோவுக்குட்பட்ட 20வயதுக்குட்பட்டவர்களுக்கான குமித்தே கராத்தே போட்டியில் வெள்ளிப்பத்தக்கதை பெற்றுக்கொண்டார்.
இந்த சாதனைப்பயணத்திற்கு முழுமையான ஒத்தாசையினை சென்சி முருகேந்திரன் வழங்கியதுடன் அவருக்கான முழு நேர பயிற்சிகளை மட்டக்களப்பு ஜேகோமோ கழகத்தின் பிரதம பயிற்றுவிப்பாளர் எச்.ஆர்.சில்வா வழங்கியுடன் பயிற்றுவிப்பாளர் கௌசிகனும் மாணவனுக்கான பயிற்சிகளை வழங்கியிருந்தார்.
இதேபோன்று இந்த சாதனைக்கு ஆதரவு வழங்கிய மட்டக்களப்பு விளையாட்டுக்கழக தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் து.மதன் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மட்டக்களப்பு ஜேகோமோ கழகத்தின் பிரதம பயிற்றுவிப்பாளர் எச்.ஆர்.சில்வா தெரிவித்தார்.
வடக்கு கிழக்கின் வரலாற்றில் முதன்முறையாக தெற்காசிய குமித்தே கராத்தே போட்டியில் மட்டக்களப்பு வீரர் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனைபடைத்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.