இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ஒரு மாதத்திற்கு சத்தான உணவை உண்பதற்கு ஒரு இலட்சம் அல்லது ஒன்றரை இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.
ஆகவே எத்தனை குடும்பங்களுக்கு இவ்வாறான வருமானம் கிடைக்கின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வரி விதிக்கும் யோசனை, எதிர்காலத்தில் நிலைமை மோசமாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.