தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் தமது ஆட்சிக்காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தேர்தல் தொகுதி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்குள்ள ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
எவ்வாறாயினும் தமது ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அமைச்ராக பொறுற்கும் சரத் பொன்சேகாவினால் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்பன முற்றாக ஒழிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
புதிய பொருளாதார முறையொன்றை அறிமுகப்படுத்தி ஏற்றுமதியை கேந்திரமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்றுவோம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.