உள்ளூராட்சி தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் செயற்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தோல்வியை தாமதப்படுத்தி கொள்வதற்காகவே அரசாங்கம் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது என்றும் தேர்தல் பிற்போடப்பட்டால் அதன் விளைவை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்ட போது தேர்தல்கள் ஆணைக்குழு இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உள்ளூராட்சி தேர்தலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமையானது வேடிக்கையானது என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தோல்வியை பிற்போடுவதற்காக அரசாங்கம் தேர்தலை பிற்போட்டால் வாக்குரிமைக்காக நீதிமன்றத்தை நாடவும் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.