கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சிமன்ற பெண்களினால் பெண்களுக்காக அரசியலில் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள 25வீத ஒதுக்கீட்டை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்துப்போராட்டமும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாட்டில் 16நாள் செயற்பாட்டு வாரத்தினை முன்னிட்டு இந்த கையெழுத்துப்பெறும்போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு காந்திபூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.
பெண்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தவும் என்னும் தலைப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள மாநகரசபை,நகரசபை,பிரதேசசபைகளில் உள்ள பெண் உறுப்பினர்கள்,மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறுபட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
பெண்களுக்கான 25வீத ஒதுக்கீடு கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ளாத காரணத்தினால் பெண்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையே காணப்படுவதாகவும் அதனை உறுதிப்படுத்துமாறும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது ஜனாதிபதி,பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பனவற்றுக்கு மகஜர்கள் அனுப்புவதாற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பெண்கள் உரிமையினை வலியுறுத்தும் வகையில் கலந்துகொண்ட அனைத்து பெண்களும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.