நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு நிரந்தரப் பிரதிநிதிகள் நியமனத்துக்கு உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸ் குடியரசின் இலங்கை தூதுவராக நிரோஷனி மனிஷா டயஸ் அபேவிக்ரம குணசேகர மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக பாரிஸில் நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..
மேலும், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக ஹிமாலி சுபாஷினி டி சில்வா அருணதிலகவை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக லங்கா வருணி முத்துக்குமாரண, ஜோர்டான் இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக ஜே.டி.எஸ். பிரியங்கிகா விஜேகுணசேகர மற்றும் தூதுவராக சஜீவ உமயங்க மெண்டிஸ் ஆகியோரை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.