கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அலுவலகத்துக்கு அருகாமையில் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முறிந்து வீழ்ந்து பலத்தசேதங்களை எற்படுத்தியுள்ளது.
வளிமண்டலத்தில் எற்பட்ட தாழ் அழுக்கம் காரணமாக பெய்துவரும் மழைவீழ்ச்சி காரணமாக இந்த ஆலமரம் முறிந்து வீழ்ந்ததுடன் அங்கு இருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் சிறிய மண்டப கூடாரம் ஒன்றும் முற்றாக சேதமாகியுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில் அரச மரக்கூட்டுத்தாபனம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்களின் கூட்டு ஒத்துழைப்பில் மரமானது வெட்டி அகற்றப்பட்டது.