இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை அருகே கடந்த 21ஆம் திகதி ஒரு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து மயிலிட்டி அழைத்து வந்த கடற்படையினர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு கைதானவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 12 மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடித்துள்ளார்.