உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ அதிகாரி உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், நிதிச் செயலாளர், பிரதமர், அமைச்சரவை செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாய்க்கு குறையாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் வருமானம் குறைந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தப்படுவதால் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வாறு நன்மை பயக்கும் என மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார்.