வவுனியா காயங்குளம் கிராமத்தில் இடம்பெற்ற வயல்விழாவில் சோள செய்கையினால் கிடைக்க கூடிய பயன்கள், குறைந்த செலவில் அதிக இலாபத்தை ஈட்டும் வழிமுறைகள் தொடர்பில் விவசாயிகளுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது சோள செய்கையில் ஈடுபட்ட விவசாயினால் சிறிய இயந்திரங்கள் ஊடாக மண்ணை பண்படுத்தும் முறைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதுடன் அப்பகுதி மக்களிக்கும் அதன் நன்மைகள் தொடர்பிலும் நோய் தாக்கங்கள் தொடர்பாகவம் விவிளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் பி. அற்புதசந்திரன், பாடவிதான உத்தியோகத்தர் அ. சுயேந்திரா, விவசாய போதனாசிரியர் அபிரான் உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.