மின் கட்டண அதிகரிப்பு விவகாரத்தில் அமைச்சரவைக்கு கூட தங்களை மீறி செயற்பட முடியாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக சட்டமா அதிபரையோ, நீதிமன்றதையோ நாட வேண்டிய அவசியமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் பிரகாரம் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமக்கே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மின் உற்பத்திக்காக நிலக்கரிக்கு பதிலாக எரிபொருள் பயன்படுத்தப்பட்டமையினால் 13 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது.
எனவே உரிய நேரத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தொழிற்துறைகளின் வீழ்ச்சிக்கு மத்தியில் மின்கட்டணத்தை அதிகரிப்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழு உறுப்பினர்களான தங்களால் அரசியல் செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.