வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் என தேசிய ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும், வேட்புமனுக்கள் ஏற்கும் பணி எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் தேசிய ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
சம்பிரதாயங்கள் நிறைவடைந்தவுடன் தேர்தல் தின அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றங்களை தேர்தலுக்கு அழைத்த போதிலும் கலைக்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.