மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கும் மின்சார துண்டிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை நாளிலும் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குற்றம் சாத்தியே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கம் இவ்வாறான தன்னிச்சையான மற்றும் முரட்டுத்தனமான முடிவை எடுப்பது புதிதல்ல என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
பரிட்சையின் போது கூட மின்சாரம் வழங்காமல் அரசாங்கம் மக்கள் விரோதமாக எப்படி செயற்படுகின்றது என்பதை கற்பனை செய்து பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பரீட்சைக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.