வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், மக்களை வீடுகளிலேயே இருக்குமாறும், உடல்வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வடகொரிய அரசாங்கம் குறிப்பிடவில்லை.
பியாங்யாங் தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்ற தகவலும் வெளிவரவில்லை.