அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை அதி பயங்கர சூறாவளி தாக்கியுள்ளது.
மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சுழல் காற்றில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள், மின் கம்பங்கள் என அனைத்தும் சேதமடைந்தன.
மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளை முடக்கின. பலத்த காற்றால், நெடுஞ்சாலயில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் வீதி தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின.
வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூறைகள் பல மைல் தொலைவிற்கு தூக்கி எறியப்பட்டுள்ளன.
மேலும், சூறாவளி காற்றில் சிக்கி மின் கம்பங்களும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.