இலங்கை முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளடங்கலாக தொழில் வல்லுனர்களின் ஒன்றிணைந்த கூட்டணியினரால் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
நீதியற்ற, தன்னிச்சையான முறையில் மக்களிடமிருந்து கொள்ளையிடப்படும் வரிப்பணத்திற்கெதிராகவும், அரச வைத்தியசாலைகளில் நிலவுகின்ற மருந்து பொருட்களுக்கான, மருத்துவ உபகரணங்களிற்கான தட்டுபாடுகளுக்கு எதிராகவும் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசைலையில் நோயாளர்களிடமும், பொதுமக்களிடமும் கையெழுத்துக்கள் பெறப்பட்டது.
கையெழுத்து சேகரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது