ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என தான் நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நிலையான பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும் என்ற நம்பிக்கையும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பசுமை வளர்ச்சிப் பாதைக்கான இலங்கையின் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இறுதியாக வருகை தந்தத்துக்கு பின்னர் கடந்த ஆறரை ஆண்டுகளில் ஏற்பட்ட அந்த மாற்றங்கள் தான் அறிவேன் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்று நாட்டை வந்தடைந்த பான் கீ மூன் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.