யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பேரணி ஆரம்பமாகியுள்ளது.
தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையில் இந்த கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக இடம்பெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.