யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கோரி வடமராட்சி கிழக்கு மீனவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட 19 கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு குறித்த போராட்டில் ஈடுபட்டனர்.
அண்மை காலமாக வடமாட்சி கிழக்கில் ஒரு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம், மற்றும் பிற மாவட்டத்திலிருந்து வருகைதந்தும் குறித்த தொழிலில் ஈடுபடுபவதாகவும், இதனால் பிரதேசத்தில் உள்ள சிறு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆகவே நீரியல் வளத் திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களம் கடற்படை என்பன உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாலே சுருக்குவலை தொழில் அதிகமாக இடம்பெறுவதாகவும் அதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.