உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட விடயத்தில் இலங்கையில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பது குறித்து மாறிமாறி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த தேர்தலை நடத்த கூறி நிச்சயமாக அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை கொடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்த் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தை மதித்து செயற்படுபவராக இருந்தால் தேர்தலை நடத்தி இருக்க வேண்டும் என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் ஒவ்வொரு மாதமும் அன்றாட செலவுகளை ஈடு செய்வதற்கு தொடர்ச்சியாக கடனாளிகளாக மக்கள் மாறிக் கொண்டிருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டிய இரா.சாணக்கியன், மக்களுக்கான நிரவாரணத்தை வழங்க மக்களாணையுடன் அரசாங்கம் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.