தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் தற்போதைய விதிமுறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற உலக சுகாதார செயற்குழு அமர்வில் சர்வதேச விதிமுறைகள் குறித்த உடன்பாடு எட்டப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் சுகாதார விதிமுறைகளில் 307 திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுகாதாரத்தை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம், குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், மேலும் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.