கிழக்குப் பகுதியில் உள்ள பாக்முட் நகரினை இழக்கும் அபாயம் அதிகரித்துவருவதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக நகரைக் கைப்பற்ற முயன்றுவரும் நிலையில், உக்ரைனிய ஜனாதிபதியின் இந்த கருத்து வந்துள்ளது.
தங்கள் நிலைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தக்கூடிய அனைத்தையும் ரஷ்யா அழித்துவருதாகவும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யா மற்றும் அதன் பிரிவினைவாத கூட்டாளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பாக்முட்டில், ஒரு வருடத்திற்கு முன்பு ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து அங்கு சில கடுமையான சண்டைகள் நடந்துள்ளன.
டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் பிரிவினைவாதத் தலைவர் டெனிஸ் புஷிலின், நகரத்திற்குள் நடைமுறையில் அனைத்து வீதிகளும் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக தெரிவித்தார்.