நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீள பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு என்பன உள்ளிட்ட 8 கோாிக்கைகளை முன்வைத்து பாரிய வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றள.அதற்கமைய நாளைய தினம் வடக்கு கிழக்கில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சுகயீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
அதேவேளை நாளைய தினம் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு முன்பாக ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரிய சுகயீன வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமது இந்த போராட்டத்திற்கு ஊடகங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்துடன் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு முன்பாக நாளை போராட்டம் முன்னெடுக்கப்படும் போது நாட்டின் ஏனை யவைத்தியசாலை ஊழியர்களும் வைத்தியசாலைக்கு முன்பாக வந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கை வைத்தியசாலைகளில் சேவையாற்றும் வைத்தியர்கள் உட்பட சிற்றூழியர்கள் வரையான 75 சேவைப் பிரிவுகள் இருக்கினறன.ஆகவே இந்த சுகயீனப் பேராட்டத்தை 75 வைத்திய சேவைப் பிரிவினர் அனைவரும் சேர்ந்து தான் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது இந்த போராட்டத்தால் மக்களுக்கும் அசௌகரியம் ஏற்படலாம், எனவே மக்களும் இதனை கவத்தில் கொண்டு செய்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போராட்டத்தின் போது, அவசர சிகிச்சைகளை மாத்திரம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வேலை நிறுத்த போராட்டம் சுகாதார பிரிவினருக்கு மாத்திரமல்ல சுகாதாரப் பிரிவுடன் சேர்ந்த ஏனையவர்களும் இணைந்து தான் மேற்கொள்ளப்படுகின்றது.