தேர்தலுக்கு பொருத்தமான தினம் என எதிர்வரும் மாதம் 25ஆம் திகதியை தேர்தல்கள் ஆணையம் தெரிவித்திருக்கிறது இதனை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை உறுதியான தேர்தல்கள் நடக்கும் தினத்தினையே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் என கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் செயல்பாட்டாளர் அருள் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
தேர்தல்கள் குறித்து பொதுமக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் அரசின் நாடகத்தின் ஒரு அங்கமாக இதனை பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத் கருத்து தெரிவிக்கையில் எமது நாட்டினை இந்தியாவுக்கு விற்கும் நடவடிக்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது ஒரு பக்கத்தில் இந்திய மீனவர்கள் எமது கடலினை ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றனர், மறுபுறத்தில் இந்தியாவின் எண்ணெய் விற்பனைக்காக திருகோணமலை எண்ணைக் குதங்கள் இந்தியாவிடம் தாரை வார்க்கப்படுகிறது இது இவ்வாறு இருக்க இப்போது இந்திய ரூபாயினை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பிலான ஒரு பேச்சும் நிலவி வருகிறது, உண்மையிலேயே இலங்கை என்பது ஒரு நாடா அல்லது இந்தியாவின் ஒரு பாகமா என அவர் கேள்வி எழுப்பினார்.
இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார், மேலும் குறித்த அரசன் செயற்பாடு எமது தேசிய பாதுகாப்பிற்கும் பொதுமக்களது தேசிய பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்க கூடிய ஒரு செயற்பாடாகவே இதனை தாம் பார்ப்பதாக தெரிவித்தார்