இந்தியா முதன்மையாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறையால் உலகப் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளது. மேலும் அந்த எழுச்சியை யாராலும் ‘தடுக்க முடியாதது’ என ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏஆர்ஐ) 61ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, செப்டம்பர் 2022இல், உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக மாறியது. இது எளிதில் கிடைக்கவில்லை.
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயமாகும். விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்துறையின் காரணமாக, உலகப் பொருளாதாரத்தில் இந்தியா உயரும் நட்சத்திரமாக உள்ளது.
இந்தியாவின் எழுச்சியைத் தடுக்க முடியாதது. வாய்ப்புகள் மற்றும் முதலீட்டுகள் ஆகியவற்றின் கேந்திர தளமாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திறமை மற்றும் முதலீட்டை ஈர்ப்பதற்காக உறுதியான கொள்கைகள் நடைமுறையில் இருக்கும் அத்தகைய சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்த பத்தாண்டுகளின் முடிவில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும் அவா சட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண்மைத் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, ஐசிஏஆர் இயக்குநர் ஜெனரல் ஹிமான் பதக்,இயக்குநர் ஏ கே சிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
14 வெளிநாட்டு மாணவர்கள் உட்பட சுமார் 402 மாணவர்கள் தங்கள் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை வெற்றிகரமாக முடித்ததற்காக பட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.