மூன்று மாதத்தில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் இணைய தளங்களை உருவாக்க வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணையின் போதே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் தகவல் அறியும் விண்ணப்பங்களை இணையம் மூலம் தாக்கல் செய்யும் வசதிகள் இல்லாததால், தகவல்களை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மூன்று மாதத்தில் அதற்குரிய இணையத் தளங்களை உருவாக்க வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டனர்.



















