மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் அதிக ஓட்டங்களை விரட்டியடித்து தென்னாப்பிரிக்கா அணி உலக சாதனை படைத்துள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 18 ஓவர்கள் 5 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயிட்டன் டி கொக் தனது முதல் சதத்தை அடித்தார்.
இப்போட்டியில், இரு அணிகளும் 517 ஓட்டங்களைப் பெற்றன, இது இருபது கிண்ண வரலாற்றில் ஒரு போட்டியில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையாகும்.
அத்தோடு 20 ஓவர்கள் கொண்ட போட்டி வரலாற்றில் ஒரு அணி அதிவேகமாக 200 ஓட்டங்களை நேற்று கடந்திருந்தமையும் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.