பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது ஐரோப்பிய சங்கத்திற்கு வாக்குறுதி வழங்கியதில் பிரகாரம் பயங்கரவாத தடுப்பு சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
இருப்பினும் அன்று நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை காரணம் காட்டி அது நிறைவேற்றப்படாமல் போனதாகவும் எம்.ஏ.சுமந்திரன்சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மோசமானது என சுட்டிக்காட்டியுள்ள எம்.ஏ.சுமந்திரன், அதனை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதேநேரம் மாகாண சபை தேர்தலையும் நிதி நிலைமையை காரணம் காட்டி உள்ளூராட்சித் தேர்தலையும் நடத்தாமல் இருப்பது தனி மனித சர்வாதிகார ஆட்சியை காட்டி நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசமான சூழலில் இச்சட்டத்தை கொண்டுவந்து அரசாங்கத்துக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை தெரிவிக்கின்ற மக்களை அடக்கி ஒடுக்க அரசாங்கம் முயல்வதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.