மலையக மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
இன்று ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, இன்று மாற்று கட்சிகளை சார்ந்தவர்கள் மக்கள் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் அதனால் மக்கள் இது தொடர்பாக எதுவும் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை .
ஹட்டனில் உள்ள இந்த தொழிற்பயிற்சி நிலையமானது மலையக மக்களின் பிள்ளைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும் . இந்த பயிற்சி நிலையத்தின் ஊடாக மலையக மக்களின் மாணவர்கள் ஒவ்வொரு துறையிலும் பல அனுபவங்களை கொண்டுள்ளனர் இங்கு பயிற்களை நிறைவு செய்து கொண்டு வெளியேறும் மாணவர்கள் தொழில் ரீதியாக பொருளாதாரத்தை ஈட்டி கொள்ள முடியும் எமது சமுகத்தில் பல்வேறு திறமைகளை கொண்ட மலையக இளைஞர் யுவதிகள் காணப்படுகிறார்கள் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் வட கிழக்கு தவிர அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
மலையகத்தில் 76வருடங்ளாக மக்களின் பிரச்சனைகள் தீர்க்க முடியாமல் காணப்பட்டது எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றை வருட காலப்பகுதியில் மலையக மக்களுடைய ஒரு சில பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்து வருகிறோம்
இன்று ஜனாதிபதி பிரதமர் அமைசாசர்கள் நாங்கள் அனைவரும் ஒரு கூட்டணியாக செயற்பட்டு வருகிறோம் ஆகையால் எஞ்சியிருக்கின்ற மலையக மக்களின் பிரச்சனைகளை நாம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டார்














