கறவை மாடுகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் இருந்து பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை தொடர்பாக விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
கறவை மாடுகளை திருடி இறைச்சிக்காக படுகொலை செய்யும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளதுடன், கறவை மாடுகள் திருடப்படுவதும் அதிகரித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் மாகாண மற்றும் மாவட்ட விவசாய அதிகாரிகள் அமைச்சரிடம் இந்த விடயத்தை முன்வைத்துள்ளனர்.
இதனால் கறவை மாடுகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் சங்கிலிகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளொன்றுக்கு 20 முதல் 30 லிட்டர் வரை பால் கறக்கக்கூடிய கறவை மாடுகள் இவ்வாறு திருடப்பட்டுள்ள நிலையில் மாடு திருடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.