லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றிருந்தது.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின்னர் மணிரத்னம் படமாக எடுத்தார்.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் 2023-ஆம் ஆண்டு ஏப்ரம் 28-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும், இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொச்சினை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழு ஹைதராபாத் செல்லவுள்ளனர்.
இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி 5.30 மணிக்கு நொவோட்டல் ஹைதராபாத் கன்வென்ஷன் சென்டரில் (Novotel Hyderabad Convention Centre) நடக்கவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.