உய்குரின் கலாசார பாரம்பரியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், ஜின்ஜியாங் பிராந்தியத்துடனான வரலாற்று உறவுகளை மங்கலாக்குவதற்கும் விளம்பர காணொளி மூலம் சீனா மீண்டும் முயற்சித்துள்ளது,
குறித்த காணொளியில், உய்குர் இஸ்லாம், பௌத்த மதத்தில் இருந்து வந்தது என்பதை நிரூபிப்பதற்காக, ஜின்ஜியாங்கில் இரண்டாவது பெரிய கிராண்ட் குக்கா மசூதியில் ஒரு பெண் பௌத்த பாணியில் இருப்பதைப்போன்று காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
உய்குர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று கூறி, அவர்களும் நம்மைப் போன்றவர்கள் என சுட்டிக்காட்டும் வார்த்தைகளும் பதிவாக்கப்பட்டுள்ளன.
பீற்றர் விண்டரின் கூற்றுப்படி, சின்ஜியனின் கிராண்ட் குக்கா மசூதி, ஹன் சீன வரலாறு மற்றும் கலாசாரத்துடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ள பௌத்த-முஸ்லிம் மத மையமாக உள்ளது.
இதில் பௌத்த நடனக் கலைஞர் மையப் பிரார்த்தனை மண்டபத்தின் தூண்களுக்கு நடுவே நின்று அவமானப்படுத்தியுள்ளார்.
‘இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு முயற்சி மட்டுமல்ல, பிராந்தியத்தை மேலும் மங்கலாக்கச் செய்வதற்கான ஒரு படியாகும், உய்குர்களை தொடர்ந்து அவமானப்படுத்தும் ஒரு செயற்பாடாகும்’ என்று நாடுகடத்தப்பட்ட கவிஞர் அஜீஸ் இசா எல்குன் கூறுகிறார்.
அத்துடன், உய்குர்களின் கலாசார வேர்கள் அறுக்கப்படுகின்றன. எமது மதம் கேலி செய்யப்படுகிறது, எல்குன், கதவுகள் வழியாகத் தூண்கள் நிறைந்த மண்டபத்திற்குள், தலைக்கவசம் இல்லாமல், காலணிகளைக் கூட அணிந்துகொண்டு, செல்கின்றமையானது மதத்திற்கு அவமரியாதை செய்வதாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேநேரம் பிரார்த்தனை பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் குறித்த நடனக் கலைஞர், முழு பௌத்தத்தை மையப்பபடுத்தும் செம்மஞ்சள் உடையணிந்து, பல நூற்றாண்டுகளாக பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்த பௌத்த, இஸ்லாமிய கலாசாரங்களின் வரலாற்றை மாற்றிப் பேசுகின்றார் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.