பாரேன் புரட்சியின் 33ஆவது ஆண்டு நினைவு நாளில் கிழக்கு துர்கிஸ்தானில் சீனா நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக உய்குர் ஆர்வலர்கள் இஸ்தான்புல்லில் உள்ள சீன தூதரகத்திற்கு அருகில் கூடி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
1990 ஏப்ரல் 5இல் கிசில்சு கிர்கிஸ் மாகாணத்தின் அக்டோ கவுண்டியில் பாரன் கிளர்ச்சியின் போது சீன ஆட்சி மற்றும் இராணுவத்தை எதிர்த்து கொல்லப்பட்டவர்களைக் கௌரவிப்பதற்காக உலகெங்கிலும் உள்ள உயர்குர்கள் அத்தினத்தை நினைவு கூருகின்றனர்.
குர்ஆன் ஓதப்பட்டு காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் தொடங்கியது.
உள்ளுர் உய்குர் தலைவர் அப்துல்லாஹத் உடுன், கிழக்கு துர்கெஸ்தான் மனித உரிமை கண்காணிப்பகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் ஆர்வலர் ஓமர் கரீம் ஆகியோர் உட்பட சுமார் 120 உய்குர் ஆண்களும் பெண்களும் இக்கவனயீர்ப்பில் பங்கேற்றிருந்தனர்.
அவர்கள், சீன அரசு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கோசங்களை எழுப்பியதோடு சீன அட்டூழியங்களை எடுத்துக்காட்டும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான அப்பாவி உய்குர்களைக்கொன்ற சீன மிலேச்சத்தனத்தைக் கண்டித்து அப்துல்லாஹாத் உடுன் அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், கிழக்கு துர்கிஸ்தானில் சீனா இனப்படுகொலை செய்துள்ளதாகவும், உலகமே பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கிழக்கு துருக்கிஸ்தான் சீனாவில் ஜின்ஜியாங் என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு துருக்கிஸ்தானில் சீனாவால் நடத்தப்படும் உய்குர்களின் கட்டாய இனப்படுகொலையைத் தடுக்க துருக்கியும் இஸ்லாமிய உலகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு துர்கெஸ்தான் அறிஞர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த ஓமர் கரீம், கிழக்கு துர்கிஸ்தானில் உய்குர்களை அடிமைப்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவர இஸ்லாமிய உலகத்தை வலியுறுத்தினார்.
நாடுகடத்தப்பட்ட மிகப்பெரிய உய்குர் புலம்பெயர்ந்தோர் துருக்கியில் உள்ளது. இஸ்தான்புல்லில் உள்ள உய்குர் மக்கள் சீன அட்டூழியங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர் மற்றும் காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இருப்பிடம் குறித்து சீன அரசிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையில், சீனாவில் ஜின்ஜியாங் என்று அழைக்கப்படும் கிழக்கு துர்கிஸ்தானில் பாரேன் புரட்சியின் 33ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட்டன.
பங்களாதேஷ் கிலாபத் அந்தோலன் அதன் தலைவர் ஷஹீத் ஜைதின் யூசுப் தலைமையில் டாக்காவில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தது. கூட்டத்தின் போது, கிழக்கு துர்கிஸ்தானை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததற்காகவும், அப்பாவி உய்குர் முஸ்லிம்கள் மீது அட்டூழியங்களைச் செய்ததற்காகவும் சீனாவைக் கண்டனம் செய்தனர்.
பின்னர், உய்குர் மக்களைக் குறைப்பதற்காக கிழக்கு துர்கிஸ்தானில் ஹான் சீனர்களைக் குடியேற்றுவதற்கான பிரசினையை முன்னிலைப்படுத்த ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.
இத்தகைய நகர்வுகளை நிறுத்துமாறு சீன அரசாங்கத்தை எதிர்ப்பாளர்கள் எச்சரித்தனமை குறிப்பிடத்தக்கது.