முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில் சிங்கள மக்கள் சிலர் தற்போது வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
வவுனியா, ஒலுமடு வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டிருந்தன.
இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 27ம் திகதி வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் அங்கு வைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது
மேலும் பூஜை வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்காதிருப்பதற்கும், அங்கு பாதுகாப்பு மேற்பார்வைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கும் பொலிஸாருக்கு கட்டளையிடப்பட்டது.
இந்நிலையில் சரத் வீரசேகர தலைமையில் ஒருசிலர் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.













