பாடசாலை அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து உத்தியோகபூர்வமாக ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்ட குழு, பல யோசனைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
குறித்த குழு அண்மையில் கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது என்றும் இதில் நீண்ட காலமாக அதிபர் சேவையில் நிலவும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பிரதான சேவையில் காணப்படும் கொடுப்பனவு முரண்பாடுகள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் ஆகியவன தொடர்பாகவும் இந்தபோது குழு கவனம் செலுத்தியுள்ளது.
குறித்த குழுவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், இதற்கு குறுகிய கால தீர்வை விரைவில் காணுமாறு பணிப்புரை விடுத்ததாகவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.