கியூபாவை தளமாகக் கொண்ட, சீன உளவு நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் பதிலளித்துள்ளார்.
கியூபாவில் பல ஆண்டுகளாக உளவுப்பிரிவை சீனா இயக்கி வருவதையும், 2019ல் அதை மேம்படுத்தியதையும் அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்திய நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் சீனா தமது வெளிநாட்டு தளவாட அடிப்படையிலான உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் பல முக்கியமான முயற்சிகளில் ஒன்றே கியூபா நடவடிக்கை என கூறியுள்ளார்.
மேலும் சீனாவின் நோக்கம் இராணுவ சக்தியை அதிக தூரத்தில் நிலைநிறுத்துவதே என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை கியூபாவும் சீனாவும் பல பில்லியன் டொலர்களுக்கு ஈடாக நாட்டில் உளவு தளத்தை உருவாக்க ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புக் குழுவின் பேச்சாளர் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அவதூறு பரப்பும் செயற்படு என கியூபாவின் துணை வெளிவிவகார அமைச்சர் கார்லோஸ் பெர்னாண்டஸ் டி கோசியோ, டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இவ்வாறான வதந்திகள் மற்றும் அவதூறுகளை பரப்புவதை அமெரிக்க நிறுத்திக்கொள்ள வேண்டும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.