இவ்வருடம் தேர்தல் நடத்தப்பட எந்தவொரு வாய்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்யாமல், செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.