சப்ரகமுவ மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நவீன் திஸாநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக கடந்த வாரம் இராஜினாமா செய்த டிக்கிரி கொப்பேகடுவவிற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நவீன் திஸாநாயக்க 2020 ஆம் ஆண்டு வரை 20 வருடங்களாக நுவரெலியா மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்தியிருந்தார்.
இறுதியாக அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.